சின்னமனுார் குறுவட்ட போட்டி கிருஷ்ணய்யர் பள்ளி முதலிடம்
சின்னமனுார் : சின்னமனுார் வட்டார குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் சின்னமனூர் கிருஷ்ணய்யர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றுள்ளது.சின்னமனுார் வட்டார குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் 28 பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தடகளம், கபடி, கேரம், செஸ், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் 100 மீ, 200 மீ ஓட்டம், தட்டி எட்டு வைத்து தாண்டுதல் 100 மீ, 110 மீ, 400 மீ , குண்டு எறிதல், உயரம் தாண்டுதல் தட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று குறுவட்ட அளவில் முதலிடத்தை பிடித்துசாம்பியன் பட்டம் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் செயலர் மாரிமுத்து, தலைமையாசிரியர் முனிராஜா, உதவி தலைமையாசிரியர் இளங்கோவன் ஆகியோர் பாரட்டினர். உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் கவுரவிக்கப்பட்டார்.