உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கள்ளர் பள்ளிகளில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் - பார்வர்ட் பிளாக் கட்சி வலியுறுத்தல்

கள்ளர் பள்ளிகளில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் - பார்வர்ட் பிளாக் கட்சி வலியுறுத்தல்

கூடலுார்: அரசு கள்ளர் பள்ளிகளில் இன்று (ஜூலை 12) மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்த வலியுறுத்தி பார்வர்ட் பிளாக் கட்சியினர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.கள்ளர் சீரமைப்பு மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கவும் அதன் பெயரினை மாற்றி அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை கண்டித்து தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இன்று கள்ளர் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை பார்வர்ட் பிளாக் கட்சி, பிரமலைக்கள்ளர் சமூக நல கூட்டமைப்புகள், கள்ளர் சீரமைப்பு மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பாதுகாப்பு மீட்பு குழு சார்பில் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.இதற்கான கோரிக்கை மனுவை கூடலுார் ராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது. கட்சியின் நகர செயலாளர் ராஜீவ், முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில், ஒன்றிய செயலாளர் மகேஷ்வரன், நகர பொதுச் செயலாளர் அறிவழகன், ஹிந்து முன்னணி நகர செயலாளர் ஜெகன், பீஷ்மர் அறக்கட்டளை தலைவர் மலைச்சாமி உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ