மேலும் செய்திகள்
பண்ருட்டியில் 2ம் நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்
05-Mar-2025
மூணாறு : மூணாறில் ஊராட்சி சார்பில் ஐந்து நாட்கள் நடந்த மெகா அளவிலான தூய்மை பணிகளில் பத்து டன் குப்பைகள் அகற்றப்பட்டன. கேரளாவில் 'குப்பை இல்லா நவ கேரளம்' எனும் திட்டத்தை அரசு செயல் படுத்தி வருகிறது. அதன்படி மூணாறில் ' ஜீரோ வேஸ்ட்' எனும் மெகா தூய்மை பணி மார்ச் 4ல் துவங்கி நேற்று நிறைவு பெற்றது.அப்பணியில் ஊராட்சி, மின்துறை, மாவட்ட சுற்றுலாதுறை, தீயணைப்பு துறை, ஹைடல் சுற்றுலா ஊழியர்கள், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட ஊழியர்கள், தூய்மை, பசுமை பணியாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வாகன ஒர்க் ஷாப் ஊழியர்கள், சுற்றுலா ஆர்வலர்கள், பா.ஜ., கட்சியினர், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கை கோர்த்தனர். மூணாறில் ஹெட் ஒர்க்ஸ் அணை முதல் ரோடு, ஆறு ஆகியவற்றின் ஓரங்கள், பொது இடங்கள் உள்பட நகர் முழுவதும் பல்வேறு குழுக்களாக குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கடந்த ஐந்து நாட்களில் பத்து டன் குப்பை அகற்றப்பட்டன. அதில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் என்பது குறிப்பிடதக்கது.
05-Mar-2025