உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரி விளையாட்டு விழா

கல்லுாரி விளையாட்டு விழா

கூடலுார்: mகம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில் 29 வது விளையாட்டு விழா செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இணைச் செயலாளர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, ஆலோசனை குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், சுப்ரமணியம், பொன்னுராம், சக்தி வடிவேல் முன்னிலையில் நடந்தது. முதல்வர் ரேணுகா வரவேற்றார். கொடி ஏற்றத்துடன் மாணவியரின் அணிவகுப்பு நடந்தது. ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு விளையாட்டுத் துறையின் உறுதிமொழியை மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.100 மீ., 200 மீ., 400 மீ., ஓட்டப் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன், விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் சுசிலா, உடற்கல்வி ஆசிரியைகள் சூரியபிரபா, முனீஸ்வரி, அர்ச்சனா, சேக் நஸ்ரின் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை