உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காங்கிரஸ் ஆய்வுக் கூட்டம்

காங்கிரஸ் ஆய்வுக் கூட்டம்

தேனி: தேனி தனியார் ஹோட்டலில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், திண்டுக்கல், கரூர், தேனி லோக்சபா தொகுதிகளுக்கான கிராம காங்கிரஸ் கமிட்டி நியமன பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. பெருங்கோட்ட பொறுப்பாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். மண்டல ஒருங்கிணைப்பளர் பழனிச்சாமி,தேனி லோக்சபா தொகுதி பொறுப்பாளர் செல்வராஜ் பாண்டியன், தேனி மாவட்டத் தலைவர் முருகேசன், கரூர் மாவட்டத் தலைவர் கோகலே, திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் சதீஸ்குமார், திண்டுக்கல் மாநகர மாவட்டத் தலைவர் துரைமணிகண்டன் முன்னிலை வகித்தனர். சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் சம்சுதீன்,முனியாண்டி, சன்னாசி, மாவட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிப். 28 க்குள் கிராம கமிட்டி பணிகளை முடிக்க அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை