கொலை மிரட்டல்: 5 பேர் மீது வழக்கு
போடி:போடி அருகே மேலச் சொக்கநாதபுரத்தை சேர்ந்த பால் வியாபாரி முத்துப்பாண்டி 36. இவரிடம் குப்பிநாயக்கன்பட்டி முத்தையா என்பவர் 20 லிட்டர் பால் வாங்கி உள்ளார். முத்துப்பாண்டி பணம் கேட்டதில் இவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் முத்தையா குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த உறவினர் ஹரிணி, மனோகரன், வினித், கோபிநாத் ஆகியோரை வரவழைத்து முத்துப்பாண்டியை கம்பால் தாக்கினர். விலக்கி விட வந்த விக்ரம் என்பவரையும் அடித்து காயம் ஏற்படுத்தி, கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். முத்துப்பாண்டி புகாரில் போடி தாலுகா போலீசார் முத்தையா, ஹரிணி உட்பட 5 பேர் மீது விசாரிக்கின்றனர்.