உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு செயல் விளக்க பயிற்சி

என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு செயல் விளக்க பயிற்சி

உத்தமபாளையம்; ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம்., மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ்., திட்ட மாணவர்கள் வாழை நார் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருட்கள் பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டனர்.கன்னிசேர்வை பட்டியில் உள்ள வாழை நார் தொழிற்சாலையை பார்வையிட்டனர். அங்கு வாழை நாரில் இருந்து மதிப்பு கூட்டப்பட்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. அதனை பார்வையிட்டனர். நேற்று சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் வகையிலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் பயன்படும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கப்படுவதை பார்வையிட்டனர். இது பெண்கள் முன்னேற்றத்திற்கான சிறு தொழிலாகவும், விவசாயம், சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் வகையில் இருந்தன. தொழிற்சாலையின் இயக்குனர்கள் ஜமீன்பிரபு, வனிதா பேசி, மாணவர்களின் சந்தேகங்களுக்கு விரிவான விளக்கம் அளித்தனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சாமுவேல், எட்வின் சுந்தர், கபிலன், விஜிலா, நேருராஜன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !