உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காலாவதி குளிர்பானங்கள் புகையிலை பறிமுதல் ஆவின் பாலகம் உட்பட 6 கடைக்கு சீல்

காலாவதி குளிர்பானங்கள் புகையிலை பறிமுதல் ஆவின் பாலகம் உட்பட 6 கடைக்கு சீல்

தேனி: தேனி தாலுகா 'உங்களுடன் உங்கள் ஊரில்' முகாமில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ் புகையிலை பொருட்கள் 7 கிலோ, காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யதனர்.தேனி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் 'உங்களுடன் உங்கள் ஊரில் 'முகாம் நடந்தது.கலெக்டர் உத்தரவில் கலால் உதவி ஆணையர், உணவுப்பாதுகாப்புத்துறையினர், போலீசார், உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து 147 கடைகளில் திடீர்சோதனை மேற்கொண்டனர்.இதில் 6 கடைகளில் இருந்து 7 கிலோ புகையிலை பொருட்கள்பறிமுதல் செய்யப்பட்டது.ரோட்டோர கடைகள், ஓட்டல்களில் நடத்திய ஆய்வில் அதிகநிறமி சேர்க்கப்பட்டிருந்த 9.5 கிலோ உணவுப்பொருட்கள்,காலாவதியான, சுகதாரமின்றி தயாரிக்கப்பட்ட 9 லிட்டர்குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ஆவின் பாலகம் உட்பட 4 கடைகளுக்கு தலா ரூ.25ஆயிரம்,இரு கடைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம்,பிளாஸ்டிக் விற்பனை செய்த 5 கடைகளுக்கு தலா ரூ. 2ஆயிரம், அதிக நிறமி சேர்த்த 5 கடைகளுக்கு தலா ரூ.ஆயிரம் என மொத்தம் ரூ.2.15லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை