உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஐ.டி., ஊழியரிடம் ஆன்லைனில் பரிசுவிழுந்ததாக ரூ.17.69 லட்சம் மோசடி போலி கால்சென்டர் உரிமையாளர் குண்டாசில் கைது

ஐ.டி., ஊழியரிடம் ஆன்லைனில் பரிசுவிழுந்ததாக ரூ.17.69 லட்சம் மோசடி போலி கால்சென்டர் உரிமையாளர் குண்டாசில் கைது

தேனி:தேனி மாவட்டத்தில் ஆன்லைனில் பொருள் வாங்கியவரை ஏமாற்றி ரூ.17.69 லட்சம் மோசடி செய்த பீஹாரைச் சேர்ந்த போலி கால்சென்டர் உரிமையாளர் ரோகித்குமார் 27, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.தேனி மாவட்டம் டி.சிந்தலைச்சேரி ஐ.டி., ஊழியர் அருள்பிரகாஷ் 27. மே 2024ல் ஆன்லைன் செயலியில் வாட்ச் வாங்கினார். அப்போது ரூ.12.80 லட்சம் அவருக்கு பரிசு விழுந்ததாக குறிப்பிட்ட நிறுவனத்தின் கோல்கட்டா பரிசுப்பொருட்கள் பிரிவில் இருந்து தெரிவிக்கப்பட்டது. மேலும் http://shopping winnerresults.comஎன்ற இணையதளத்தில் சரிபார்க்கவும் கூறினர். அதை சரி பார்த்த போது கார் பரிசு விழுந்துள்ள விபரம் காட்டியது. மேலும் அதற்கு வரியாக ரூ.12,800 செலுத்தவும் தெரிவிக்கப்பட்டது.அதை நம்பி அருள்பிரகாஷ் ஆன்லைனில் பணம் அனுப்பினார். பல்வேறு காரணங்களை கூறி தொடர்ந்து பணம் செலுத்த கூறியதால் அவர் ரூ.17.69 லட்சத்தை 11 வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார். ஆனால் கார் தராமல் ஏமாற்றினர். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.எஸ்.ஐ., தாமரைக்கண்ணன் பீஹாரைச் சேர்ந்த போலி கால் சென்டர் உரிமையாளர் ரோகித்குமாரை ஆக., 25ல் கைது செய்து தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர். போலீஸ் விசாரணையில் ரோகித்குமார் போலியாக கால் சென்டர்களை டில்லியில் அமைத்தது போல பீஹாரில் இருந்தபடி தமிழகத்தை சேர்ந்தவர்களிடம் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரையின்படி கலெக்டர் ஷஜீவனா ரோகித்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு தேனி மாவட்ட சிறையில் உள்ள ரோகித்குமாரிடம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை