உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குடும்ப தகராறு: மூன்று பெண்கள் மீது வழக்கு

குடும்ப தகராறு: மூன்று பெண்கள் மீது வழக்கு

தேனி : தேனியை சேர்ந்த சசிக்குமார். இவர் தீயணைப்பு வீரராக பணிபுரிகிறார். இவரது மனைவி கலாதேவி 36. இவர்கள் இணைந்து தேனியில் பழக்கடை நடத்தினர். கடையில் பணிபுரிந்த ரேவதி 31, என்பவருடன் சசிக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் வடபுதுப்பட்டியில் ஹவுசிங்போர்டு குடியிருப்பில் சசிகுமார் இவரது 14,7,3 வயது மகன்களுடன் ரேவதியும் வசிக்கின்றனர்.மனைவி கலாதேவி, அவரது தாய் முத்துமணி 58, உடன் தனியாக வசிக்கிறார். இந்நிலையில் 14 வயது மகனை ரேவதி தாக்கியதாக 7 வயது மகன் கலாவதிக்கு தகவல் தெரிவித்தார். வடபுதுபட்டி ஹவுசிங் போர்டு சென்ற கலாவதி,முத்துமணி இருவரும் ரேவதியிடம் கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் கலாவதி, ரேவதி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ரேவதி புகாரில் கலாவதி, முத்துமணி மீதும், கலாவதி புகாரில் ரேவதி மீதும் வழக்கு பதிந்து அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ