உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மருமகனுக்கு கத்திக்குத்து மாமனார் கைது

மருமகனுக்கு கத்திக்குத்து மாமனார் கைது

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே டி.புதூரைச் சேர்ந்தவர் லாரன்ஸ் 26, இவர் ஓராண்டுக்கு முன் இதே ஊரைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் இருவருக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன் டி.சுப்பலாபுரம் நாழி மலை அருகே மகளிர் குழு பெண்களுடன் ஏற்பட்ட பிரச்னையில் கைது செய்யப்பட்ட லாரன்ஸ் ஒரு மாதம் ஜெயிலில் இருந்தார். சின்னச்சாமி தனது மகள் மற்றும் 8 மாத பெண் குழந்தையை ஆண்டிபட்டியில் உள்ள தனது வீட்டில் பாதுகாத்து வந்தார். ஜாமினில் வந்த லாரன்ஸ் மனைவி மற்றும் குழந்தையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறியதால் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது சின்னச்சாமி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து குத்தியதில் லாரன்ஸ் காயம் அடைந்தார். ஆண்டிபட்டி போலீசார் சின்னச்சாமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ