புனித ஆரோக்கிய மாதா சர்ச்சில் பெருவிழா கொடியேற்றம்
கம்பம், : கம்பம் புனித ஆரோக்கிய மாதா சர்ச்சில் நடந்த பெருவிழா கொடியேற்றத்தில் திரளாக கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.கம்பம் காமயகவுண்டன்பட்டி ரோட்டில் உள்ள புனித ஆரோக்கிய மாதா சர்ச்சில் மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் பெருவிழா கொடியேற்றம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கம்பம் சர்ச்சில் பாதிரியார் பாரிவளன் தலைமையில் வேளாங்கன்னி மாதா உருவம் பொறித்த கொடியை செபஸ்தியார் குருசடியிருந்து பவனியாக எடுத்து வரப்பட்டு சர்ச் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் விருதுநகர் வட்டார பாதிரியார் அருள்ராயன் கொடியை ஏற்றி வைத்தார். சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. கொடியேற்றத்துடன் துவங்கிய இத் திருவிழா செப்., 8ம் - தேதி வரை நடைபெறுகிறது. தினமும் மாலை சிறப்பு பிரார்த்தனைகள், சொற்பொழிவுகள் நடைபெறும். செப்.,7ல் பெருவிழா தேர்ப்பவனி நடைபெறும். சர்ச்சிலிருந்து துவங்கும் தேர்ப்பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வரும். விழாவிற்கான ஏற்பாடுகளை சர்ச் நிர்வாகம் செய்து வருகிறது.