தீத்தடுப்பு பயிற்சி
தேனி: கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., முகாமில் மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில் தீத்தடுப்பு, பேரிடர் மீட்பு தொடர்பான பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. சின்னமனுார் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமை வகித்தார். தீ விபத்துக்களை தவிர்ப்பது, விபத்தின் போது எவ்வாறு செயல்பட வேண்டும், முதலுதவி, தொடர்பு எண்கள் பற்றி விளக்கப்பட்டது. பள்ளி ஆசிரியர் சிவமுருகசேன் நன்றி கூறினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் மாணிக்கராஜா பயிற்சியை ஒருங்கிணைத்தார்.