உயிர்நீத்த வீரர்களுக்கு மலரஞ்சலி
தேனி : தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே வடக்கு மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஹிந்து முன்னணி தேனி நகரத் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடந்தது. வடக்கு மாவட்டத் தலைவர் முருகன், மாவட்டச் செயலாளர் உமையராஜன், ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட பொறுப்பாளர் மகேந்திரன் மலர் துாவி மரியாதை செலுத்தினர். நகரச் செயலாளர் வெங்கடேசன் நன்றி தெரிவித்தார்.தேனி பெரியகுளம் ரோட்டில் ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில், புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் ராமராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜூ, மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட இணை அமைப்பாளர் செல்வபாணடி, நகரத் தலைவர் சிவராம், நகர அமைப்பாளர் முத்துராஜ், நகரப் பொறுப்பாளர் கனகுபாண்டி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.