உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாட்டிக்கு கத்திக்குத்து: பேரன் மீது வழக்கு

பாட்டிக்கு கத்திக்குத்து: பேரன் மீது வழக்கு

தேனி: தேனி பவர் ஹவுஸ் தெரு வைரமுத்து 61. இவரது தாய் வீரம்மாள் 84. இவர் கீழ் வீட்டிலும், வைரமுத்து மேல் மாடியில் வசிக்கின்றனர். வீரம்மாளின் பேரன் கண்ணன். இவரது பெற்றோர் இறந்ததால் பாட்டி பராமரிப்பில் கண்ணன் வளர்ந்தார். பின் கண்ணன், தேவாரத்தை சேர்ந்த கவிதாவை திருமணம் முடித்து அங்கு வாழ்ந்தார். பாட்டியிடம் அடிக்கடி செலவிற்கு பணம் கேட்டும், பாட்டியின் வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்க வலியுறுத்தினார். இதற்கு பாட்டி மறுத்தார். ஆத்திரமடைந்த பேரன், பாட்டியை கைகளால் தாக்கி, கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த வீரம்மாள் தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சையில் உள்ளார். பாட்டி புகாரில் தேனி எஸ்.ஐ., சரவணன், பேரன் கண்ணன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை