உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நீதிமன்ற உத்தரவில் பணி நியமன ஆணை வழங்கல்

நீதிமன்ற உத்தரவில் பணி நியமன ஆணை வழங்கல்

தேனி: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் குமார், மாரியப்பன், கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் 2006 முதல் 2016 வரை தாலுகா அலுவலகங்களில் மாநில சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் பிரிவில் பணிபுரிந்தனர். சிறப்பு திட்டங்கள் முடிந்ததால், நால்வரும் பணி ரத்து செய்யப்பட்டது. இவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிரந்தர பணி வழங்க கோரி வழக்கு தொடுத்தனர். இதில் ஒருவர் டி.என்.பி.எஸ்.பி., குரூப் 2 தேர்ச்சி பெற்று பணிக்கு சென்றார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவில் பகுதிநேர ஊழியர்களாக பணிபுரிந்த குமார், மாரியப்பன், கார்த்திக் ஆகியோருக்கு கலெக்டர் அலுவலகம், தேனி, பெரியகுளம் தாலுகா அலுவலகங்களில் உதவியாளராக பணிபுரிய பணி நியமன ஆணையை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, கலெக்டர் நேர்முக உதவியாளர் சிந்து, அலுவலக மேலாளர் ஜஸ்டின் சாந்தப்பா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !