உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பேட்டரி கார் பழுது நீக்கி பயன்படுத்த வலியுறுத்தல் சுருளி அருவியில் வசதி இன்றி அவதி

பேட்டரி கார் பழுது நீக்கி பயன்படுத்த வலியுறுத்தல் சுருளி அருவியில் வசதி இன்றி அவதி

கம்பம் : சுருளி அருவியில் பழுதடைந்து கூண்டிற்குள் நிறுத்தியுள்ள பேட்டரி காரை பழுது நீக்கி சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சுருளி அருவியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருந்தது. திடீரென வனத்துறை கேட் அமைத்து நுழைவு கட்டணம் வசூலிக்க துவங்கியது. இதனால் வாகனங்களை பாலத்திற்கு வெளியே நிறுத்த உத்தரவிட்டது. தொடர்ந்து கட்டணத்தை செலுத்தி விட்டு சுமார் 2 கி.மீ. தூரம் அருவிக்கு நடந்து செல்ல வேண்டும். பராமரிப்பு இன்றி குண்டும் குழியுமான ரோடாக உள்ளது. இதில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் நடந்து செல்லசிரமம் அடைகின்றனர். சிரமத்தை தவிர்க்க கம்பம் ஒன்றியம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5.80 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரி வாகனம் வாங்கி வனத்துறையிடம் ஒப்படைத்தது. சில மாதங்களே ஒடிய அந்த பேட்டரி கார் பழுதடைந்தது. எனவே, வாகனத்திற்கு கூண்டு செய்து நிறுத்தி பூட்டினர். பின்னர் வனத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளுக்கென வேன் இயக்கப்பட்டது. தற்போது அதையும் கம்பம் அலுவலகம் கொண்டு சென்று விட்டனர். சைக்கிள் சர்வீஸ் என்று 20 சைக்கிள்களை வாங்கி நிறுத்தினர். அந்த சைக்கிள்களையும் காணவில்லை.இச் சூழலில் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் முதியவர்கள், மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள், சிறுவர்கள் நிலைமை பரிதாபமாக உள்ளது. சுற்றுலா பயணிகளிடம் தலா ரூ.30 நுழைவுக் கட்டணம் என வசூலிக்கும் வனத்துறை, பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேட்டரி காரை பழுது நீக்கி, சுற்றுலா பயணிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ