உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

கம்பம்: கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. எல்.கே.ஜி. யூ.கே.ஜி படிக்கும் குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடங்களில் உடை அணிந்து நடனம் ஆடினர். மாணவ,மாணவிகள், ஆசிரியைகளும் பாரம்பரிய உடை அணிந்து கோலாட்டம், கும்மி, பல்லாங்குழி ஆடுதல், தேவராட்டம், சிலம்பம் விளையாடினர். பாரம்பரிய உணவு திருவிழாவையொட்டி வீடுகளில் இருந்து தயார் செய்து கொண்டு வந்த கடலை மிட்டாய், பணியாரம், கொழுக்கட்டை போன்றவைகள் விற்கப்பட்டது. அதில் கிடைத்த தொகை வயநாடு நிவாரண நிதிக்கு கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தனர். பள்ளி தாளாளர் காந்தவாசன், இணை செயலர் சுகன்யா , முதல்வர் புவனேஸ்வரி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை