உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / எழுத்தறிவு வார விழா

எழுத்தறிவு வார விழா

தேனி : சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் சார்பில் எழுத்தறிவு வார விழா நடந்தது. உறுதி மொழி எடுத்தல், மரக்கன்றுகள் நடுதல், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட மாவட்ட உதவி திட்ட அலுவலர் மோகன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பாண்டியன் முன்னிலை வகித்தார். தன்னார்வலர் கனிமொழி, வயது முதிர்ந்த கற்போர் பலரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி