உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வாட்ஸ் அப் மூலம் லாட்டரி விற்றவர் கைது

வாட்ஸ் அப் மூலம் லாட்டரி விற்றவர் கைது

தேனி : மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. தற்போது லாட்டரி விற்பனையிலும் டிஜிட்டல் முறையில் விற்பனையை துவங்கி உள்ளனர். சின்னமனுார் எஸ்.ஐ., சுல்தான்பாஷா தலைமையிலான போலீசார் குச்சனுார் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பஸ் ஸ்டாப்பகுதியில் நின்றிருந்த பாண்டியனை விசாரித்த போது அவர் அலைபேசியில் 'வாட்ஸ் அப்' மூலம் கேரள லாட்டரிகளை வாங்கி அதனை விற்பனை செய்தது தெரிந்தது. பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை