உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாரத்தான் போட்டி: முதலிடம் பெற்று வடுகபட்டி மாணவிகள் சாதனை

மாரத்தான் போட்டி: முதலிடம் பெற்று வடுகபட்டி மாணவிகள் சாதனை

போடி: போடியில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டியில் வடுகபட்டி மாணவிகள் முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்தனர்.இப்போட்டியில் தேனி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளி தலைவர் செந்தில் தியாகராஜன், மாவட்ட இறகு பந்தாட்ட கழக துணைத் தலைவர் ரவி, மீனாட்சிபுரம் ஹரே கிருஷ்ணா டிரஸ்ட் நிர்வாகி கவுர் மோகன்தாஸ், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பொருளாளர் முகமது சேக் இப்ராஹிம், நிர்வாகச் செயலாளர் மீனாம்பிகை, வேவ் பவுண்டேஷன் தலைவர் கணேசன், செயலாளர் ஜோதி முன்னிலை வகித்தனர். போடி அத்லெட்டிக் அகடாமி செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். போட்டியை போடி டவுன் இன்ஸ்பெக்டர் கோபிநாத் துவக்கி வைத்தார். 550க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.மாரத்தான் ஓட்டம் போடி அணைக்கரைப்பட்டி விலக்கில் துவங்கி போஜன் பார்க், கட்டபொம்மன் சிலை, காமராஜ் பஜார் வழியாக போடி ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளி வரை நடந்தது. போட்டியில் வடுகபட்டி பகவதி அம்மன் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி லத்திகா முதலிடமும், புவிசா 2 ம் இடமும், தேசிகா 3 ம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நினைவு பரிசும், பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ