உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேசிய பெண்கள் சமத்துவ தினம்

தேசிய பெண்கள் சமத்துவ தினம்

உத்தமபாளையம் : உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் தேசிய பெண்கள் சமத்துவ தினம் கொண்டாடப்பட்டது. மகளிர் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு மன்றத்தின் தலைவர் பேராசிரியர் பாத்திமா பர்வீன் தலைமை வகித்தார். பெண் ஆளுமைகளின் முன்னேற்றத்திற்கு தடை யார். ஆண்களா பெண்களா என்ற தலைப்பில் மாணவ மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது . நிகழ்ச்சியில் முதல்வர் சிராசுதீன் , உள்தர மதிப்பீட்டு குழு தலைவர் முகமது சமீம் பங்கேற்றனர். பட்டிமன்றத்திற்கு , தமிழ்துறை தலைவர் முருகன் நடுவராக இருந்தார். மாணவ, மாணவிகள்,பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை