உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விதிமீறி கட்டுமானம் ஆவணங்கள் தாக்கல் செய்ய நோட்டீஸ்

விதிமீறி கட்டுமானம் ஆவணங்கள் தாக்கல் செய்ய நோட்டீஸ்

மூணாறு: மூணாறு, தேவிகுளம் ஆகிய பகுதிகளில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து நடந்த கட்டுமானங்களை தடுத்து நிறுத்தி அவற்றின் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு வருவாய்துறையினர் நோட்டீஸ் அளித்தனர்.இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உள்பட எட்டு கிராம நிர்வாகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுமானங்களுக்கு வருவாய்துறையின் தடையில்லா சான்றிதழ் கட்டாயமாக்கி கேரள உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அதனை மீறி மூணாறு உள்பட பல பகுதிகளில் கட்டுமானங்கள் நடந்து வருகின்றன.அது குறித்து வருவாய்துறை சிறப்பு குழு மூணாறு உள்பட பல பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதில் மூணாறில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விதிமீறி எம்.ஜி., காலனி உள்பட மூன்று இடங்களிலும், தேவிகுளத்தில் இரண்டு இடங்களிலும் கட்டுமானங்கள் நடந்தது. அவற்றை, தேவிகுளம் சிறப்பு தாசில்தார் ஹரிகுமார் தலைமையில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். சம்பந்தப்பட்ட கட்டுமானங்கள் தொடர்பான ஆவணங்களை மூன்று நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ