உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அங்கீகரித்த நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்க உத்தரவு

அங்கீகரித்த நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்க உத்தரவு

தேனி : விநாயகர் சிலைகளை அங்கீகரிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும்.' என, ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ஷஜீவனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு,பாதுகாப்பு குறிதத ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில், எஸ்.பி., சிவபிரசாத் முன்னிலையில் நடந்தது.கலெக்டர் பேசுகையில், ஒலிபெருக்கி அமைக்க ஆர்.டி.ஓ., உள்ளாட்சி, நெடுஞ்சாலைத்துறையில்தடையில்லா சான்று பெறுவது அவசியம். சட்டவிரோத மின் இணைப்பு செய்ய கூடாது. சிலை பீடத்துடன் இணைந்து 10 அடிக்கு மேல் உயரம் இருக்கக்கூடாது. பிற மத வழிபாட்டு மையங்கள் வழியாக ஊர்வலம் செல்லக்கூடாது. பிரதிஷ்டை செய்த 3 நாட்களுக்குள் சிலை கரைக்க வேண்டும் என்றார். கலெக்டரின் நேர்முக உதவியார் சிந்து, பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்துமாதவன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி