உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பட்டா மாறுதல் கோரிய 16,860 மனுக்களில் உரிய தகவல் இன்றி 49 சதவீத மனு தள்ளுபடி நிலஅளவை துறை, பத்திர எழுத்தர் ஆலோசனையில் தகவல்

பட்டா மாறுதல் கோரிய 16,860 மனுக்களில் உரிய தகவல் இன்றி 49 சதவீத மனு தள்ளுபடி நிலஅளவை துறை, பத்திர எழுத்தர் ஆலோசனையில் தகவல்

தேனி: தேனி மாவட்டத்தில் பட்டா மாறுதல் கோரி 16,860 மனுக்கள் வந்துள்ளதில் முறையான தகவல் இல்லாத 49 சதவீத மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக பத்திர எழுத்தர் ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.தேனியில் பத்திரப்பதிவுத்துறை, நில அளவைத்துறை சார்பில் பத்திர எழுத்தாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நில அளவைத்துறை உதவி இயக்குனர் அப்பாஸ் தலைமை வகித்தார். மாவட்ட பதிவாளர் பூபதி முன்னிலை வகித்தார். நில அளவை துறை ஆய்வாளர் முருகன் பேசுகையில், கடந்த ஓராண்டில் பட்டா மாறுதல் கோரி 16,860 மனுக்கள் வந்துள்ளன. அதில் 7600 ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள 49 சதவீத மனுக்கள் தள்ளுபடி ஆனது. பத்திரங்களில் உள்ள சர்வே எண்ணும், பட்டா கோரிய மனுவின் சர்வே எண், பெயர், நான்குமால் வித்தியாசம் உள்ளது. இதுபோன்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. பத்திரம் பதிவு செய்த 30 நாட்களில் பட்டா மாறுதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனுமதி இல்லாத மனைகளுக்கு பத்திரபதிவில் வரைபடம் இணைப்பதில்லை. அனுமதி பெற்ற மனைகளுக்கு வரைபடம் தெளிவாக இணைப்பதில்லை. கம்பம், போடி, பெரியகுளம், தேனி, சின்னமனுார் பகுதிகளில் பத்திரம் பதிவு செய்யும் போது, நகராட்சியில் உள்ள டி.எஸ்.எல்.ஆர்., அளவையில் குறிப்பிட்ட சர்வே எண்ணை பயன்படுத்த வேண்டும். பழைய சர்வே எண் பயன்படுத்துவதால், பத்திரம் ஒருவர் பெயரிலும், பட்டா ஒருவர் பெயரிலும் உள்ளது. நகர்புற அளவை சரிபார்க்க ' Anytime anywhere' என்ற இணையமுகவரியை பயன்படுத்தலாம். பஞ்சமி நிலம், கள்ளர் ஜாதி நிலங்களை பத்திரபதிவு செய்ய வேண்டாம் என்றனர்.பத்திர எழுத்தர்கள் பேசுகையில், தேனி நகர்பகுதி விவசாய, வீட்டு மனைகள் என வீரப்ப அய்யனார் கோயில் முதல் குன்னுார் பாலம் வரை தேனி பஜார் தெரு என உள்ளது. வீட்டு மனைகளாக உள்ள கே.ஆர்.ஆர்., நகர், என்.ஆர்.டி., நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பட்டா இல்லை. இதனால் பதிவு செய்வதில் சிக்கல் நிலவுகிறது. என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை