உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஸ்கூட்டரை சேதப்படுத்திய படையப்பா

ஸ்கூட்டரை சேதப்படுத்திய படையப்பா

மூணாறு: மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் மிகவும் பிரபலமான படையப்பா ஆண் காட்டு யானை கடந்த இரண்டு மாதங்களாக குண்டளை, அருவிக்காடு, செண்டுவாரை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் சுற்றித்திரிந்தது.அந்த யானை நேற்று முன்தினம் இரவு மூணாறு அருகே குட்டியாறுவாலியில் குடியிருப்பு பகுதிக்கு வந்தது. அங்கு அதிகாலை 1:00 மணிக்கு பால்மணி என்பவர் வீட்டின் முன் நிறுத்தி இருந்த ஸ்கூட்டரை கீழே தள்ளி சேதப்பபடுத்தியது. நீண்ட நேரம் குடியிருப்பு பகுதியில் வலம் வந்த படையப்பா, அப்பகுதியை விட்டு தாமாக வெளியேறியது. நேற்று பகலில் கிராம்ஸ்லாண்ட் எஸ்டேட் பகுதியில் சைலன்ட்வாலி ரோட்டில் நடமாடியதால், அந்த வழியில் அச்சத்துடன் பயணித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ