மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்
27-Jan-2025
போடி : போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குளோபல் கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி நடந்தது. பள்ளியின் தாளாளர் வேதா தலைமை வகித்தார். முதல்வர் சதீஷ், ரேவன் ஆங்கிலப்பள்ளி தாளாளர் பாண்டி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செயலாளர் ஆனந்த் பிரகாஷ், கவுன்சில் தலைவர் சதீஷ்குமார், இயக்குனர் கிருத்திகா, ஆசிரியர்கள் பாண்டியன், மனோகரன், சிலம்பாட்ட கழக செயலாளர் நீலமேகம், வழக்கறிஞர் முருகன் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் பொன்னி தேவி சுதா வரவேற்றார். ஓவிய போட்டியில் 530 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் போடி சிசம் பப்ளிக் பள்ளி மாணவர் தீபக் விஜய் முதலிடமும், தி ஸ்பைஸ் வாலி பப்ளிக் பள்ளி மாணவி கன்சிபாரதி 2 ம் இடமும், சிசம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி நிரஞ்சனா 3 ம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு போடி வட்டார கல்வி அலுவலர்கள் ராஜமுருகன், சம்பூர்ண பிரியா பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
27-Jan-2025