உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின்சாரம் தாக்கி ஓய்வூதியர் பலி

மின்சாரம் தாக்கி ஓய்வூதியர் பலி

தேனி: தேனியில் குளியலறைக்கு சென்ற போது சுடுதண்ணீருக்காக 'வாட்டர் ஹீட்டர்' ஆன் செய்த ஓய்வூதியர் கணேசன் 69, மின்சாரம் தாக்கி பலியானார்.தேனி பழைய ஜி.ஹெச்.ரோடு., மிரண்டா லைன் கணேசன். ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துத்துறை ஊழியர். இவரது மனைவி இளமதி மகள்களுடன் நேற்று காலை சர்ச்சுக்கு சென்றார். வீட்டில் இருந்த கணேசன் குளியலறைக்குச் சென்றவர் 'வாட்டர் ஹீட்டர்'ரை ஆன் செய்தார்.அப்போது மின்சாரம் தாக்கி உடலில் தீக்காயம் ஏற்பட்டு, இறந்தார். வீட்டிற்கு வந்த இளமதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடலை தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !