உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தெருக்களில் அதிவேகமாக செல்லும் டூவீலர்கள் நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம்

தெருக்களில் அதிவேகமாக செல்லும் டூவீலர்கள் நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம்

கூடலுார்: கூடலுார் நகராட்சி குடியிருப்புகள் அதிகம் உள்ள தெருக்களில் அதிவேகமாக டூவீலர்கள் செல்வதால் சிறுவர்கள், முதியவர்கள் அச்சம் அடைந்து பாதிக்கப்படுகின்றனர்.கூடலுார் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. நெடுஞ்சாலையை இணைக்கும் பல முக்கிய தெருக்களில் டூவீலர்களில் செல்பவர்கள் அதிவேகமாக போட்டி போட்டுக்கொண்டு ஓட்டிச் செல்கின்றனர். குறிப்பாக வாலிபர்கள் விழிப்புணர்வு இன்றி வேகத்தைக் காட்டுகின்றனர். பல குறுகிய தெருக்களில் சிறுவர்கள், முதியவர்கள் அச்சத்தில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. தெருக்களில் அதிவேகமாக டூவீலர்களை ஓட்டி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர். நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபடுவது போல், பல முக்கிய தெருக்களிலும் போலீசார் ரோந்து சென்று வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை