உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரேஷன் பணியாளர் செயற்குழு கூட்டம்

ரேஷன் பணியாளர் செயற்குழு கூட்டம்

தேனி: வீரபாண்டியில் ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில பொருளாளர் பொன்அமைதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து வரும் லாரிகளில் எடைதராசு கொண்டு வர வேண்டும். கட்டாய இறக்கு கூலி வசூலிக்க கூடாது, விடுமுறை நாட்களில் பொருட்கள் நகர்வு செய்யக்கூடாதுஎன மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட சிறப்பு தலைவர்கள் பன்னீர் செல்வம், அழகர்சாமி, மாவட்ட தலைவர் மகாலிங்கம், மாவட்ட செயலாளர் அய்யனார், பொருளாளர் முத்துராயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ