உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சமதர்மபுரம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

சமதர்மபுரம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

தேனி : தேனி சமதர்மபுரத்தில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, கோயிலில் உள்ள கற்பகவிநாயகர், சிவசுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் உடனுறை அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.இதற்கான யாகசாலை பூஜைகள் செப்., 13ல் துவங்கியது. தொடர்ந்து கால பூஜைகள் நடந்த நிலையில், நேற்று காலை 4:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து 7:15 மணிக்கு மேல் மஹா கும்பாபிஷேகம், மூலவர், பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. யாகசாலை பூஜைகள், கும்பாபிஷேகம், பூஜைகள், தீபாராதனைகள் தலைமை அர்ச்சகர் வெங்கடேஷ் சிவம் தலைமையில், விக்னேஷ்சிவம் உள்ளிட்ட அர்ச்சகர்கள் செய்தனர். விழாவில் கே.எம்.சி., குழும நிர்வாக இயக்குனர்கள் முத்துகோவிந்தன், சியாம், அரசு ஒப்பந்ததாரர்கள் பாண்டியராஜன், வசந்த், ஆதித்யா ரியல் எஸ்டேட் லோகநாதன், சரவணா டிபார்ட் மெண்ட்ஸ் சரவணக்குமார், காயத்ரி ஜூவல்லரி செந்தில்குமார், லைப் பப்ளிக் பள்ளி தாளாளர் நாராயணபிரபு, தேனி தி.மு.க., நகரச் செயலாளர் நாராயணபாண்டியன், எல்.எம்.சி., சில்க்ஸ் குமார், கிளாசிக் இன்டிரியர்ஸ் மணி, பி.கியூ.எஸ்., சோலார் நிர்வாக இயக்குனர் ஹரிஹரன், கே.பி., பியூட்டி பார்லர் ராம்தாஸ் பங்கேற்றனர். இவர்களை கோயில் கமிட்டி சார்பில் நிர்வாகி முத்துராம் வரவேற்றார். திருப்பணிக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !