உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உழைப்பாளர் தினத்தில் துாய்மை பணியாளர்கள் இன்ப சுற்றுலா

உழைப்பாளர் தினத்தில் துாய்மை பணியாளர்கள் இன்ப சுற்றுலா

போடி : உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் இரண்டு நாட்கள் இன்ப சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் நிரந்தர, தற்காலிகமாக 50 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள் அனைவரும் குடும்பத்துடன் இன்ப சுற்றுலாவாக திருச்செந்தூர் அழைத்து சென்று வர பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது. அவர்களுக்கு தேவையான உணவு, தங்கும் இடம், போக்குவரத்து செலவு தவிர்த்து அத்தியாவசிய செலவிற்கு ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.700 வழங்கப்பட்டு உள்ளன. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ