பள்ளி மாணவிகள் சாதனை
சின்னமனூர் : கரூரில் உலக சாதனைக்கென யோகா போட்டிகள் நடைபெற்றது. இப் போட்டிகளில் சின்னமனூர் விகாசா பப்ளிக் பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவி விஷ்ணுமாயா, ஆறாம் வகுப்பு மாணவி யோக ஸ்ரீ ஆகியோர் பதஞ்சலி கோனாசனா என்னும் ஆசனத்தை தொடர்ந்து 10 நிமிடங்கள் செய்து உலக சாதனை படைத்தனர். சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டு நிறுவனம் இருவருக்கும் சாதனைக்கான சான்றிதழ்களை வழங்கியது. சாதனை மாணவிகளை பள்ளியின் தாளாளர் இந்திரா, செயலர் உதயகுமார், நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி , முதல்வர் ராபியா பர்கானா ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்.