உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவர்களை ஊக்கப்படுத்த அரசு பள்ளிகளில் அறிவியல் பயிற்சி முகாம்

மாணவர்களை ஊக்கப்படுத்த அரசு பள்ளிகளில் அறிவியல் பயிற்சி முகாம்

தேனி : மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 4 அரசு பள்ளிகளில் அறிவியல் பயிற்சி முகாம் நடக்கிறது. நேற்று கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பயிற்சி முகாம் நடந்தது.மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்த மத்திய அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கழகம் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளில் 'ஜிக்யாசா' என்ற விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்கள் நடத்த ஒக்கரைப்பட்டி, சிலமரத்துப்பட்டி, கொடுவிலார்பட்டி, தருமாபுரி அரசு மேல்நிலைப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு முகாமில் சென்னை கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மைய ஆய்வக மூத்த முதன்மை விஞ்ஞானி ராபர்ட் சாம் தலைமையில், மூத்த விஞ்ஞானிகள் சுந்தர் குமார், அசோக்குமார், முதன்மை தொழில்நுட்ப அதிகாரி சதீஷ்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு கட்டுமான தொழில் நுட்பங்கள், நிலநடுக்கம் குறித்தும், நிலைத்து நிற்கும் கட்டுமானம், நானோ தொழில்நுட்பம், அறிவுசார் சொத்துரிமைகளான காப்பிரைட், பேட்டர்ன் ரைட் எவ்வாறு பெறுவது குறித்து விளக்கினர். தலைமை ஆசிரியர் ரெங்கராஜ் தலைமையில் ஆசிரியர்கள் பயிற்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.ஒக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில் மூத்த முதன்மை விஞ்ஞானிகள் மகேஷ்வரன், கல்பனா, முதன்மை விஞ்ஞானிகள் பர்வேஸ் அகமது, ேஹமலதா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ