உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருமணம் முடித்து வைக்க கோரி பெற்றோரை தாக்கிய மகன் கைது

திருமணம் முடித்து வைக்க கோரி பெற்றோரை தாக்கிய மகன் கைது

பெரியகுளம்: திருமணம் செய்து வைக்ககோரி பெற்றோரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த 'பாசக்கார மகனை' போலீசார் கைது செய்தனர்.பெரியகுளம் அருகே தாமரைக்குளம் வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் 75. இவரது மனைவி செல்லம்மாள் 70. இவர்களது மகன் ராமநாதனுக்கு 42. பெண் பார்த்து வந்தனர். காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த ராமநாதன், கட்டையால் தாய், தந்தையரை தாக்கி விரைவில் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். காலம் தாழ்த்தினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். காயமடைந்த செல்லம்மாள் மதுரை அரசு மருத்துவமனைக்கும், பெருமாள் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தென்கரை எஸ்.ஐ., செந்தில்குமார், ராமநாதனை கைது செய்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி