உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாநில கோகோ போட்டி: சிவகங்கை அணி சாம்பியன்

மாநில கோகோ போட்டி: சிவகங்கை அணி சாம்பியன்

பெரியகுளம்: மாநில கோகோ வீராங்கனைகள் போட்டியில் சிவகங்கை மாவட்ட அணி முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி அம்மாள் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாநில, மாவட்ட கோகோ கழகம், லட்சுமிபுரம் ரோஸி வித்யாலயா பள்ளி சார்பில் மாநில வீராங்கனைகள் கோகோ விளையாட்டு போட்டிகள் மூன்று நாட்கள் நடந்தது. இதில் தேனி, திண்டுக்கல், சென்னை, கோவை, திருச்சி, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, சிவகங்கை உட்பட முப்பது மாவட்டங்களில் இருந்து 350க்கும் அதிகமான வீராங்கனைகள் விளையாடினர். லீக் சுற்று போட்டிகளாக துவங்கி நாக் அவுட் போட்டியாக முடிந்தது. காலிறுதி போட்டியில் 8 அணிகளும், அரையிறுதிக்கு 6 அணிகளும் விளையாடினர். முதலிடத்தை பிடிக்க சிவகங்கை மாவட்ட அணியும், ஈரோடு மாவட்ட அணியும் மோதியது. இதில் சிவகங்கை அணி வெற்றி பெற்று சாம்பியனானது. 2ம் இடத்தை ஈரோடு அணியும், 3ம் இடத்தை கிருஷ்ணகிரி மாவட்ட அணியும், 4 ம் இடத்தை கோவை அணியும் பெற்றது.பரிசளிப்பு விழா: ரோஸி வித்யாலயா பள்ளி தலைவர் ராஜா தலைமை வகித்தார். கோகோ விளையாட்டு கழக தலைவர் டாக்டர் முத்துகுகன், இணைச்செயலாளர் நெல்சன் சாமுவேல் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் ஐஸ்வர்யா வரவேற்றார். பள்ளி முதல்வர் பாரதரத்தினம், கோகோ நடுவர் குழு தலைவர் விமலேஷ்வரன், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் காமேஷ்வரன் பங்கேற்றனர். சாம்பியன் பட்டம் வென்ற சிவகங்கை மாவட்ட அணிக்கு விஜயலட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பையும், பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 2,3,4 ம் இடம் பிடித்த அணிகளுக்கும் கோப்பைகள், பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி