மாநில வலு துாக்கும் போட்டி: போடி மாணவர்கள் சாதனை
போடி: மாநில அளவில் நடந்த வலு துாக்கும் போட்டியில் போடி மாணவர்கள் முதல், இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.தமிழ்நாடு வலு துாக்கும் சங்கம், மதுரை மாவட்ட வலு துாக்கும் சங்கம் சார்பில் மாநில அளவிலான வலு துாக்கும் போட்டி மதுரையில் நடந்தது. போட்டியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட போடி நீலமேகம் பிள்ளை அகடாமியை சேர்ந்த மாணவர்கள் முதல், 2 ம் இடம் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.ஆண்களுக்கான 43 கிலோ எடை பிரிவில் போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் கோபிநாத், 48 கிலோ எடை பிரிவில் கோகுல் பாலன், 66 கிலோ எடை பிரிவில் போடி ஜமீன் தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவர் அருண்பாண்டியன், 24 கிலோ எடை பிரிவில் 7 வது வார்டு நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர் நாவலன் ஆகியோர் குட் லிப்டராக தேர்வு செய்யப்பட்டனர்.மகளிருக்கான 52 கிலோ எடை பிரிவில் தேனி நாடார் சரஸ்வதி கலைக் கல்லூரி மாணவி காருண்யா குட் லிப்டராக தேர்வு செய்து சான்றிதழ் பெற்றார். 63 கிலோ எடை பிரிவில் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி துர்கை வேணி முதலிடம் பெற்று தேசிய அடையாள போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பாண்டி மீனா மூன்றாம் இடம் பெற்றார். 48 கிலோ எடை பிரிவில் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுகதர்ஷினி, சுகப்பிரியா 2 ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தேனி மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் குமார், செயலாளர் நீலமேகம், மாஸ்டர்கள் சொக்கர் மீனா, மோனீஸ்வர், தீபன் சக்கரவர்த்தி, வாஞ்சிநாதன் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.