மேலும் செய்திகள்
2.24 லட்சம் வேம்பு நடவு செய்ய இலக்கு
28-Aug-2024
தேனி : மாவட்டத்தில் 120 எக்டேர் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற எக்டேருக்கு ரூ. 9600 மானியம் வழங்கப்பட உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.மாவட்டத்தில் உள்ள தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற வேளாண் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக ஆண்டிபட்டி 29, கடமலை குண்டு, பெரியகுளம், போடி தலா 15, தேனி 16.2, உத்தமபாளையம் 10, சின்னமனுார் 14.8, கம்பம் 5 எக்டேர் என 120 எக்டேர் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் தரிசு நிலத்தில் உள்ள முட்புதர்களை அகற்றி சமன் செய்து, உழவு பணி மேற்கொண்டு விளைநிலமாக மாற்றலாம். இதற்கு விவசாயிகள் தங்கள் விரும்பமுள்ள வேளாண் இயந்திரங்களை பயன்படுத்தலாம். விளைநிலமாக மாற்ற ஒரு எக்டேருக்கு ரூ.9600 மானியம் வழங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ள விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது தேனியில் உள்ள வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ் தெரிவித்தார்.
28-Aug-2024