உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கணவர் சாவில் சந்தேகம் மனைவி போலீசில் புகார்

கணவர் சாவில் சந்தேகம் மனைவி போலீசில் புகார்

சின்னமனூர்: குச்சனூரில் மாங்காய் பறிக்க மரத்தில் ஏறியவர் தவறி விழுந்ததில் இறந்து - போனார். அவரது மனைவி தனது கணவர் சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் புகார் கூறியுள்ளார்.குச்சனூரில் உள்ள ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் 40, இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பவித்ரா 31 இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மே 31ல் செல்வராஜ் மாங்காய் பறிப்பதற்காக மா மரத்தில் ஏறிய போது, தவறி விழுந்து இறந்தார். சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.இந்திலையில் இறந்த செல்வராஜின் மனைவி பவித்ரா, ஜுன் 12 ல்,சின்னமனூர் போலீசில் தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் கொடுத்துள்ளார்.போலீசார் புகார் மனு ஏற்பு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை