மேலும் செய்திகள்
வரத்து அதிகரிப்பால் சின்ன வெங்காயம் விலை சரிவு
23-Feb-2025
கூடலுார்; கூடலுாரில் புளி வரத்து அதிகரித்தும் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கூடலுார் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள காக்கானோடை, கொங்கச்சிப் பாறை, பெருமாள் கோயில், கழுதை மேடு, லோயர்கேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் புளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட தற்போது விளைச்சல் அதிகரித்து, வரத்து கூடுதலாக உள்ளது. விவசாயிகள் கூறும்போது: தோல் நீக்காமல் 36 கிலோ எடை கொண்ட புளி மூடையின் விலை தற்போது ரூ.2700 க்கு வியாபாரிகள் வாங்குகின்றனர். இங்கிருந்து தேனி, திண்டுக்கல், அரியலுார், அய்யலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. வரத்து அதிகமாக இருந்த போதிலும் ஒரு மூடைக்கு ரூ.3500 விற்பனையானால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். உற்பத்தி செலவு கூட தற்போது கிடைக்கவில்லை., என்றனர்.
23-Feb-2025