மேலும் செய்திகள்
மின் கம்பங்களில் விளம்பரம் செய்த மேலாளர் கைது
23-Feb-2025
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் பைபாஸ் ரோடு அமைக்க தனியார் மூலம் வரைவு அறிக்கை தயார் செய்யப்படுவதாக தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., தெரிவித்தார்.ஆண்டிபட்டி பேரூராட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து எம்.பி., பேரூராட்சி தலைவர் சந்திரகலா, செயல் அலுவலர் விஜிலா மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடத்தினார். தாலுகா அலுவலகம் முதல் கொண்டமநாயக்கன்பட்டி வரை 2 கி.மீ., தூரம் தேசிய நெடுஞ்சாலையில் 'அம்ருத்' திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்க அனுமதி பெற்றுத்தர வலியுறுத்தினர். இது குறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். ஆண்டிபட்டி பேரூராட்சியில் அன்றாடம் சேகரமாகும் 8 டன் மக்கும், மக்காத குப்பை தவிர்த்து மீதமுள்ள குப்பையை கொட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வருவாய்த்துறை மூலம் பெற்று தர வலியுறுத்தப்பட்டது. பேரூராட்சி பகுதியில் முடங்கிகிடக்கும் எல்.இ.டி., பல்புகள் அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்தவும், ஆண்டிபட்டி பைபாஸ் ரோடு அமைக்க தனியார் மூலம் வரைவு அறிக்கை தயார் செய்து வருவதாகவும், இந்த அறிக்கை அடிப்படையில் வரும் லோக்சபா கூட்டத்தில் பேசுவது, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மூலம் விரைவில் ஆண்டிபட்டியில் ரயில்வே ரோட்டிற்கு தெற்கு பகுதியில் பைபாஸ் ரோடு அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எம்.பி., தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.
23-Feb-2025