கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம்
தேனி: தேனி மதுரை ரோட்டில் உள்ள உலக மீட்பர் சர்ச்சில், பாதிரியார் முத்து தலைமையில் கிறிஸ்தவர்களின் புனித தவக்காலமான சாம்பல் புதன் திருப்பலி நடந்தது. உதவி பங்கு பாதிரியார்கள் மார்ட்டின், சின்னப்பன் முன்னிலை வகித்தனர். கிறிஸ்தவர்கள்புனித சாம்பல் புதன் தவக்காலத்தை துவக்கி, நெற்றியில் சாம்பலால் சிலுவையிட்டு பாதிரியார்களிடம் ஆசிர்வாதம் பெற்றனர். மார்ச் 5 முதல் துவங்கிய தவக்காலம் ஏப்ரல் 20ல் நிறைவடையும் என பாதிரியார் தெரிவித்தார். இதுபோல் ஆண்டிபட்டி அடைக்கல மாதா சர்ச் உள்ளிட்ட சர்ச்களில் சாம்பல் புதன் திருப்பலி நடந்தது.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.