உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு மருத்துவக்கல்லுாரியில் குடிநீர்  பற்றாக்குறைக்கு தீர்வு காண கோரிக்கை; சட்டசபை பொது கணக்குக்குழு தலைவர் உறுதி

அரசு மருத்துவக்கல்லுாரியில் குடிநீர்  பற்றாக்குறைக்கு தீர்வு காண கோரிக்கை; சட்டசபை பொது கணக்குக்குழு தலைவர் உறுதி

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் சட்டசபை பொது கணக்குக்குழு அலுவல் ஆய்வுக்கூட்டம் நடந்தது.குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமை வகித்தார். தேனி எம்.பி., தங்க தமிழ்செல்வன், கலெக்டர் ரஞ்ஜீத்சிங், பொது கணக்குக் குழுவின் உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.,க்கள்,கிருஷ்ணமூர்த்தி (போளூர்), ஐயப்பன் (கடலுார்), சந்திரன் (திருத்தணி), செந்தில்குமார் (பழனி), சேகர் (பரமத்திவேலுார்), துணை செயலாளர் பாலசீனிவாசன், எம்.எல்.ஏ.,க்கள் சரவணக்குமார், மகாராஜன், டி.ஆர்.ஓ., மகாலட்சுமி முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, முல்லைப் பெரியாறில் இருந்து சிறப்பு திட்டம் செயல்படுத்தினால் தீர்வு காணலாம். அதற்கு பொது கணக்குக்குழு அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்., என்றார். இதனை குழுத்தலைவர் பரிந்துரைப்பதாக அறிவித்தார்.வடுகபட்டி பேரூராட்சித் தலைவர் நடேசன், வடுகபட்டி பேரூராட்சிக்கு சோத்துப்பாறை அணையில் இருந்து கடந்த15 நாட்களாக தண்ணீர் வரவில்லை. குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். ஆனால் பேரூராட்சியை தவிர்த்து, ஊரக பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருநாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்கிறோம் என குடிநீர் வடிகால் வாரியம் அதிகாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ