உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளி கலைத்திருவிழா போட்டி இன்று துவக்கம்

பள்ளி கலைத்திருவிழா போட்டி இன்று துவக்கம்

தேனி : மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இன்று துவங்குகின்றன.தமிழக அரசால் பள்ளி மாணவர்கள் கலைதிறன்களை வளர்க்கும் விதமாக கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பள்ளி, வட்டம், மாவட்டம் என போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர். ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல் போட்டிகளில் பங்கேற்க செய்ய வேண்டும் என ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள அரசுபள்ளிகள் 530, உதவி பெறும் பள்ளிகள் 216ல் பள்ளி அளவிலான போட்டிகள் இன்று முதல் ஆக.,30 வரை நடக்க உள்ளது. போட்டிகளில் முதல் 3 இடங்களை வென்ற மாணவர்களின் பெயர்களை செப்.,3க்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்ற பள்ளி களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி