உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூடலுாரில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

கூடலுாரில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

கூடலுார் : கூடலுார் ராஜாங்கம் சிலையில் இருந்து பள்ளிவாசல் வரையுள்ள மெயின் பஜாரில் வியாபார நிறுவனங்கள்,தனியார் மருத்துவமனைகள், ரைஸ்மில், ஓட்டல்கள், ஜவுளிக்கடைகள் என அதிகம் உள்ளன.இதனால் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். இப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றி பல ஆண்டுகள் ஆகிறது. கடைகளுக்கு வருபவர்கள் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை ஆங்காங்கே நிறுத்துகின்றனர். தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனங்கள் நிறுத்தும் நடைமுறைகளைமுறைப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பில்உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை