உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா பதுக்கிய இருவர் கைது

கஞ்சா பதுக்கிய இருவர் கைது

பெரியகுளம்; பெரியகுளம் புது பஸ் ஸ்டாண்டில் சட்ட விரோத விற்பனைக்கு கஞ்சா பதுக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.பெரியகுளம் அருகே எ.புதுக்கோட்டை ஜே.கே.காலனி அழகர் 39. வடகரை வி.ஆர்.பி., நாயுடு தெரு இவரது நண்பர் குணசேகரன் 37. இருவரும் புது பஸ் ஸ்டாண்ட்டில் கஞ்சா விற்பனை செய்வதற்கு நின்றிருந்தனர். அந்தப் பகுதியில் ரோந்து சென்ற வடகரை எஸ்.ஐ., தெய்வக்கண்ணன், இருவரையும் சோதனையிட்டார். அதில் அழகரிடமிருந்து 250 கிராம், குணசேகரனிடம் 5 கிராம் கஞ்சா கைப்பற்றி, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி