உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திரவ நுண்ணுயிர் உரம் பயன்படுத்துங்கள்

திரவ நுண்ணுயிர் உரம் பயன்படுத்துங்கள்

தேனி: விவசாயிகள் செயற்கை உரங்களை தவிர்த்து திரவ நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்துமாறு வேளாண் துறையின் அறிவுறுத்தி உள்ளனர்.வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ், துணை இயக்குனர் சுரேஷ் கூறுகையில், இயற்கை உரப்பயன்பாட்டை அதிகரிக்க தொடர்ந்து வலியுறுத்துகிறோம். தழைசத்து அதிகரிக்க அசோஸ்பைரில்லம் பயன்படுத்த வேண்டும். இது காற்றில் உள்ள தழைசத்தினை வேர்பகுதிகளில் நிலைநிறுத்தி பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது.அதே போல் பாஸ்போ பாக்டீரியா மணிசத்திற்கும், பொட்டாசியம் மொமைலைஷ் பாக்டீரியா சாம்பல் சத்துகளை வேர்கள் எடுத்துக்கொள்ளும் வகையில் எளிதாக்கி தருகிறது. பயிர் வளர்ச்சியில் திரவ நுண்ணுயிர் உரம் முக்கிய பங்காற்றும்.இதனை ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதம் தொழு உரம் அல்லது மணல் உடன் கலந்து பயன்படுத்தலாம். வேளாண் விரிவாக்க மையங்களில் 500மி.லி., திரவ ஊரங்கள் 50 சதவீத மானியத்தில் ரூ.150க்கு விற்பனையாகிறது.திரவ நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்துவதால், செயற்கை உரச்செலவில் 20 சதவீதம் குறையும். திரவ நுண்ணுயிர் உரம் தொடர்பான விபரங்களுக்கு வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்கள், விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம். என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை