வி.சி.க.,செயற்குழு
தேனி : தேனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் ரபீக் தலைமையில் நடந்தது. திண்டுக்கல் மண்டல செயலாளர் தமிழ்வாணன், மண்டல இணைச் செயலாளர் சுருளி முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்டச் செயலாளர் நாகரத்தினம், மாநில துணைச் செயலாளர்கோமதி ஆனந்தராஜ் பங்கேற்றனர். கூட்டத்தில் மார்ச் 9ல் மத நல்லிணக்க மக்கள் நல கூட்டமைப்பின் சார்பில் மதுரையில் நடக்கும் மாநாடு, ஊர்வலத்திற்கு தேனி கிழக்கு மாவட்டம் சார்பில் 50 வாகனங்களில் நிர்வாகிகள், தொண்டர்கள் செல்ல வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.