உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மேகமலையில் சாரல் அணைகளுக்கு நீர் வரத்து

மேகமலையில் சாரல் அணைகளுக்கு நீர் வரத்து

கம்பம்: மேகமலை பகுதியில் கடந்த சில நாட்களாக சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து ஆரம்பமாகியுள்ளது.தேனி மாவட்டத்தில் சுற்றுலா தலமாக விளங்குகிறது மேகமலை பகுதிகள். ஆண்டுதோறும் கோடை காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள். இந்தாண்டு அதிக வெப்பம் காரணமாக கோடையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.இந்நிலையில் கடும் வெப்பம் நிலவிய சூழல் மாறி கடந்த ஒரு வாரமாக மேக மூட்டமாக உள்ளது. சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இரவில் கன மழையும், காற்றும் வீசுகிறது.இதனால் இங்குள்ள ஹைவேவிஸ், இரவங்கலாறு, மணலாறு, வெண் ணியாறு அணைகளுக்கு நீர் வரத்து ஆரம்பமாகியுள்ளது. அணைப்பகுதிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேகமலை பகுதிகளில் சாரல் மழையும், குளிர்ந்த காற்றும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுத்துவருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ