ஏட்டு மனைவி தற்கொலை
கம்பம்: கம்பம் குரங்கு மாயன் தெரு சஞ்சீவி 43. இவரது மனைவி சுருதிகா 36. இவர்களுக்கு யுகல் 15, விபுல் 13 என 2 மகன்கள் உள்ளனர். சுருதிகாவிற்கு, உடல் நிலை மோசமாக இருந்துள்ளது. உதவிக்கு தாயார் செல்வி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தனது அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். பக்கத்து வீட்டிற்கு சென்றிருந்த தாய், தனது மகளை காணாததால், அறைக் கதவை தட்டியுள்ளார்.தட்டியும் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து, அறைக்கதவை உடைத்துப் பார்த்த போது, உள்ளே துாக்கிட்டு இறந்தது தெரிந்தது. கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.